பொதுவாக உலகமெங்குமே சினிமா நடிகர்களுக்குதான் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஹாலிவுட் திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக்குவிப்பதால் ஹாலிவுட் பட நடிகர்களுக்கு பல மில்லியன் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை ஹிந்தி படங்களுக்கு அதிக மார்க்கெட் இருப்பதால் பாலிவுட் நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுறது. அதன்பின் கோலிவுட் என அழைக்கப்படும் தமிழ் சினிமா உலகில்தான் அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.
பல வருடங்களாகவே அதிக சம்பளம் வாங்கும் இடத்தில் நடிகர் ரஜினி இருந்தார்.அவருக்கு பின் கமல்ஹாசன் இருந்தார். ஆனால், விஜய்,அஜித் வந்த பின் எல்லாம் மாறிவிட்டது. விஜய் தற்போது ரஜினியின் சம்பளத்தை நெருங்கிவிட்டார். அவ்வளவு ஏன் ரஜினியின் சம்பளத்தையே அவர் தாண்டிவிட்டார்.
ரஜினி ரூ. 105 கோடி சம்பளம் பெறும் நிலையில், விஜய் தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ரூ.118 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். மேலும், ரூ.65 கோடி மட்டும் சம்பளமாக பெற்ற அஜித் தனது சம்பளத்தை ரூ.105 கோடியாக மாற்றிவிட்டார்.
இவர்களுக்கு பின் கமல் ரூ.35 கோடியும், சிவகார்த்திகேயன் ரூ.25 லிருந்து ரூ.30 கோடியும், சூர்யா ரூ.28 கோடியையும் சம்பளமாக வாங்குகின்றனர். ரூ.8 கோடி வாங்கிய சிம்பு மாநாடு வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை ரூ.25 கோடியாக மாற்றிவிட்டார். தனுஷ் ரூ.15 கோடி வாங்குகிறார்.
நடிகர்களை பொறுத்தவரை அவர்களின் முந்தையை படங்களின் வெற்றியே அவர்களின் சம்பளத்தை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.