பிரபல சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை நிறுவனத்தின் அதிபர் சரவணா. அக்கடை தொடர்பான விளம்பர படங்களில் நடித்து பிரபலமானவர்.
இவர் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு அப்படம் தொடர்பான சண்டைக்காட்சி ஒன்று வெளியானது. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணலியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படம் தொடர்பான சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.