தமிழ் சினிமாவில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் லிங்குசாமி. சூர்யாவை வைத்து அவர் இயக்கி அஞ்சான் திரைப்படத்திற்கு பெரிய பில்டப் கொடுக்கப்பட்டது. ஆனால், படமோ ரசிகர்களை கவராமல் தோல்வி அடைந்தது. லிங்குசாமியை ரசிகர்கள் கிண்டலடிக்கும் நிலைக்கு சென்றது.
அதன்பின் லிங்குசாமிக்கு சூர்யா கால்ஷீட் கொடுக்கவே இல்லை. மேலும் அப்படத்திற்கு பின் 4 வருடங்கள் கழித்தே மீண்டும் விஷாலை வைத்து சண்டக்கோழி 2 திரைப்படத்தை லிங்குசாமி இயக்கினார். ஆனால், அப்படமும் ரசிகர்களிடம் வெற்றியை பெறவில்லை. எனவே, தமிழில் எந்த ஹீரோவும் லிங்குசாமிக்கு கால்ஷிட் கொடுக்கவில்லை.
எனவே, ஆந்திரா பக்கம் சென்று ராம் பொத்தினேனியை வைத்த தி வாரியர் என்கிற படத்தை லிங்குசாமி துவங்கினார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
இந்நிலையில்,சூர்யாவும், லிங்குசாமியும் மீண்டும் இணையும் காலம் கணிந்துள்ளது. லிங்குசாமி கூறிய கதை சூர்யாவுக்கு பிடித்துப்போக அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாக தெரிகிறது. எனவே, விரைவில் இருவரும் இணையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.