vijay

நடிகர் விஜயின் 65வது திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆனாலும் ஓரளவுக்கு வசூலை இப்படம் பெற்றுள்ளது.

தற்போது விஜய் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இப்படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார். இப்பட வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த திரைப்பம் நேரடி தமிழ் – தெலுங்கு படமாக உருவாகவுள்ளது.

இந்த படம் முடிந்த பின் விஜய் நடிக்கும் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் – லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் மீண்டும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.