லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, பஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த 3ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக மாறியுள்ளது.
இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், உலக அளவில் இப்படம் ரூ.400 கோடி வசூலை தொட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.170 கோடி வசூல் செய்துள்ளது.இதில் ஆச்சர்யம் என்னவெனில் படம் வெளியாகி 25 நாட்கள் ஆகியும் தமிழகத்தின் பல திரையரங்குகளிலும் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடி வருகிறது.
இந்நிலையில், இப்படம் தொடர்பான பல தகவல்களை லோகேஷ் வெளியிட்டு வருகிறார். விக்ரம் கிளைமேக்ஸ் காட்சியில் அவர் பீரங்கியில் சுடுவது போல் ஒரு காட்சி இருக்கும். அதற்கு அவரின் கை பெரிதாக இருக்க வேண்டும் என அவரிடம் கூறினேன். 10 நிமிடத்தில் தண்டால் எடுத்து கையை பெரிதாக்கி ஆச்சர்யம் கொடுத்தார் என ஏற்கனவே லோகேஷ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
தற்போது கமல் தண்டாள் எடுக்கும் வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
@ikamalhaasan sir’s video as promised.. He did 26..i missed recording the initial two..
The eagle has landed🔥#Vikram pic.twitter.com/5rdKG9JPoE— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 28, 2022