kamall

ரஜினியும், கமலும் நீண்ட வருட நண்பர்கள். துவக்கத்தில் இருவரும் ஒன்றாக பல திரைப்படங்களில் நடித்தாலும், ஒரு கட்டத்தில் இருவரும் தனியாக பிரிந்து நடிக்க துவங்கினர். ரஜினி சூப்பர் ஸ்டாராகவும், கமல்ஹாசன் காதல் மன்னனாகவும் மாறினர்.

கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் திரைப்படங்களை தயாரித்தும், நடித்தும் வந்தார். மாநாகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர். விஜயை வைத்து மாஸ்டர் படத்தை அவர் இயக்கி வந்தபோது, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க கமல் திட்டமிட்டார். இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றது. ஆனால், சில காரணங்களால் அது டேக் ஆப் ஆகவில்லை. அதன்பின், கமல் நடிக்க விக்ரம் படத்தை லோகேஷ் இயக்கி முடித்துள்ளார். இப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ளது.

kamal

இந்நிலையில், ரஜினியை மீண்டும் கமல் மற்றும் லோகேஷ் கனகராஜ் சந்தித்து பேசியுள்ளனர். கமல் ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே விஜய், சூர்யா, ஜெயம்ரவி ஆகியோரோடு பேச்சுவார்த்தை துவங்கப்பட்டுள்ளது.

kamal

எனவே, ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.