சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படம் மாமனிதன். இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார். இப்படம் உருவாகி 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், சில காரணங்களால் இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தின் தலைப்பு மற்றொரு தயாரிப்பாளரிடம் இருந்ததால் சிக்கல் நீடித்து வந்தது. தற்போது அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
இயக்குனர் சீனுராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘மாமனிதன்’தலைப்பு ஏற்கனவே தயாரிப்பாளர் ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது அதை முறைப்படி யுவன்சங்கர்ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார் ஆகவே மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது. தலைப்பு பெற்றதால் முதல் பார்வை,பாடல் விரைவில்’ என பதிவிட்டுள்ளார்.
இதை வைத்து பார்க்கும் போது மாமனிதன் திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.