வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் என பலரும் நடித்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் மாநாடு. ஒரு டைம் லூப் திரில்லராக இப்படத்தை உருவாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளார் வெங்கட்பிரபு.
பல வருடங்களுக்கு பின் இப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக மாநாடு அமைந்துள்ளது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இப்படத்தின் இடம் பெற்ற பல காட்சிகள் ரசிகர்களை சிலாகிக்க வைத்தாலும், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட ஒரு சண்டை காட்சி சண்டை காட்சியை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இந்நிலையில், அந்த சண்டை காட்சியில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.