web analytics
Monday, August 8SOCIAL MEDIA

மாநாடு படம் செய்த சாதனை… இன்ப அதிர்ச்சியில் நடிகர் சிம்பு….

maanaadu

சுரேஷ்காமாடி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். டைம் லூப் திரில்லராக வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது,

பல வருடங்களுக்கு பின் மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக இருந்தது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பல தியேட்டர்களில் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடியது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. மாநாடு திரைப்படம் வெளியாகி 3 வாரங்களில் சுமார் ரூ.53 கோடி வசூல் செய்தது.

நாளையோடு இப்படம் 25வது நாளை நெருங்கும் நிலையில், மாநாடு படம் உலக அளவில் ரூ.97 கோடி வசூலை நெருங்கியுள்ளது. எனவே, இப்படம் விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் இணையவுள்ளது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.58 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: