வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் என பலரும் நடித்து சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் மாநாடு. ஒரு டைம் லூப் திரில்லராக இப்படத்தை உருவாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளார் வெங்கட்பிரபு.
பல வருடங்களுக்கு பின் இப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக மாநாடு அமைந்துள்ளது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மாநாடு திரைப்படம் வெளியாகி 3 வாரங்களில் சுமார் ரூ.53 கோடி வசூல் செய்துள்ளது. இந்த தகவலை மாநாடு திரைப்படத்தின் வினியோகம் செய்த RockFort நிறுவனத்தின் Creative producer ஸ்ரீராம் தெரிவித்துள்ளார். படம் வெளியாகி 3 வாரங்கள் ஆன நிலையில், இப்படத்தை அதிக ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி வருவதால் இன்னும் சில கோடிகளை இப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.