web analytics
Saturday, September 24SOCIAL MEDIA

இந்திய அளவில் மாஸ் காட்டிய சிம்பு.. மாநாடு படம் செய்தா மகா சாதனை….

maanaadu

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன்,பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். டைம் லூப் திரில்லராக வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது,

பல வருடங்களுக்கு பின் மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக இருந்தது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பல தியேட்டர்களில் இப்படம் ஹவுஸ்புல்லாக ஓடியது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளின் ரீமேக் உரிமை இதுவரை இந்திய சினிமாவில் எந்த படமும் விற்பனை ஆகாத அளவுக்கு விலை பேசப்பட்டுள்ளதாம். பல மொழிகளிலும் மாநாடு கதையில் நடிக்க பல ஹீரோக்களும் ஆர்வம் காட்டுகிறார்களாம். அதோடு, இப்படத்தை வெங்கட்பிரபுவே இயக்கட்டும் எனவும் கூறி வருகிறார்களாம்.

இது இந்தியா சினிமா உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

%d bloggers like this: