simbu

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்க சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு. இப்படம் கடந்த வருடம் நவம்பர் 25ம் தேதி வெளியானது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், பிரேம்ஜி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். டைம் லூப் திரில்லராக வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

MAANAADU

பல வருடங்களுக்கு பின் மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக இருந்தது. மேலும், இப்படம் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. பல தியேட்டர்களில் இப்படம் ஹவுஸ் புல்லாக ஓடியது. குறிப்பாக இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலை நெருங்கியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து ரூ.117 கோடி வசூல் செய்து இந்த ஆண்டின் மெகா பிளாக்பஸ்டர் படமாக மாறியுள்ளது என இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.