நகைச்சுவை நடிகரான யோகிபாபு தர்மபிரபு படத்தில் ஹீரோவாக மாறினாலும், காமெடி கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில், பாலாஜி மோகன் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் மடோன் அஷ்வின் ‘மண்டேலா’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக சீரியல் நடிகை ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார்.
ஒரு கிராமத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெறுவதற்காக வேட்பாளர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை அரசியல் நையாண்டியுடன் படத்தில் கூறியுள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ஏப்ரல் 4ம் தேதி வெளியாகவுள்ளது.