பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வருகிறார். இப்படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. இதில், முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டீசரை பிரம்மாண்டமாக வெளியிட்ட மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம். நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் என இருவரும் வந்து இதை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என கருதிய மணிரத்னம் ரஜினியை நேரில் சந்தித்து தனது ஆசையை கூறியுள்ளாராம். அவர் கூறும் தேதியில் விழாவை நடத்தலாம் என அவர் கருதுகிறாராம்.
அதேபோல், கமல் தற்போது துபாயில் இருக்கிறார். அவர் சென்னை வந்தபின் அவரிடமும் பேசவுள்ளாராம். இருவரும் வந்தால் நல்ல விளம்பராக அமையும் என மணிரத்னம் கருதுவதாக தெரிகிறது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விழாவை நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.