வலிமை படத்திற்கு பின் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் மங்காத்தா போல் நெகட்டிவ்வான வேடத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத்தில் விரைவில் துவங்கவுள்ளது. இப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டு உருவாக்கப்படவுள்ளது. இப்படத்திற்காக சென்னை அண்ணாசாலை போன்ற செட் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளது தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே, அசுரன் படத்தில் தனுஷின் மனைவியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.