நடிகர் சிம்பு நடித்து 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதன். இப்படத்தில் சிம்புவுடன் ஜோதிகா, கவுண்டமணி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஆண்களை ஏமாற்றி மோசடி செய்யும் இளம் பெண்களை குறிவைத்து சிம்பு வேட்டையாடும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருந்து. இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மிகவும் சிறப்பாக இசையமைத்திருந்ததால் பாடல்கள் செம ஹிட் ஆனது.
இந்நிலையில், இப்படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு மீண்டும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த பணியை நந்தினி தேவி பிலிம்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. மார்ச் 19ம் தேதி இப்படம் தமிழகத்தில் 150 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இது சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.