நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பி ஏறக்குறைய முடிந்துவிட்டது. மற்ற பணிகள் 2 மாதங்கள் நடக்கும் எனவும், மே மாதம் இப்படம் வெளியாகாலம் எனவும் கூறப்படுகிறது.
அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இது விஜயின் 66வது திரைப்படமாகும். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார்.
இப்படத்திற்கு பின் விஜய் நடிக்கும் 67வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த கூட்டணி மாஸ்டர் படத்தில் இணைந்தது. விஜயின் 67 படம் தயாரிப்பில் இருக்கும் போதே இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.