லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படம் சுமார் 800 திரையரங்குகளில் வெளியானதாக கூறப்படுகிறது.
பல மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், பல மாவட்டங்களிலும் குடும்பத்துடன் ரசிகர்கள் இப்படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்துள்ளனர்.
இந்நிலையில், படம் வெளியாகி 2 நாட்கள் முடிந்துள்ள நிலையில், மாஸ்டர் திரைப்படம் ரூ.80 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 50 சதவீதம் மட்டுமே இருக்கை அனுமதி கொடுக்கப்பட்ட நிலையிலும், பல தியேட்டர்களில் இது பின்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.