mohan

80களில் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் மோகன். இவரின் பல திரைப்படங்கள் வெள்ளி விழாவை கொண்டாடியவை. இவருக்கு பெண் ரசிகை கூட்டங்கள் அதிகமாக இருந்தது. இவரது படங்களில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகும்.

ஒருகட்டத்தில் மார்க்கெட் இழந்த இவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார். கடந்த 20 வருடங்களுக்கு மேல் இவரை திரையில் பார்க்க முடியவில்லை.

தற்போது மீண்டும் அவர் நடிக்க துவங்கியுள்ளார். ஹரா என்கிற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவனை தொடர்பு கொண்ட மோகன் ‘வாங்க சார் நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’ என நச்சரித்து வருகிறாராம். ‘வெயிட் பண்ணுங்க சார் சொல்றேன்’ என நழுவி வருகிறாராம் செல்வராகவன்…

செல்வராகவன் தற்போது நடிகராக மாறி பீஸ்ட், சாணி காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.