விஜயின் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தில் டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கியிருந்தார்.
இப்படத்திற்கு பின் விஜய் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இப்படத்தை தோழா படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு 2 அண்ணன்கள் இருக்கிறார்கள். அதற்கு 80களில் நடித்த ஹீரோ ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது. அந்த வேடத்தில் மைக் மோகன் நடித்தால் நன்றாக இருக்கும் என இயக்குனர் கருதுகிறாராம். ஆனால், மோகன் சம்மதம் சொல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பல வருடங்களுக்கு பின் மோகன் இப்போதுதான் நடிக்க துவங்கியுள்ளார். அவர் நடிப்பில் ஹரா என்கிற படம் இப்போது உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வீடியோ சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.