மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். 4 தேசிய விருது மற்றும் ஏராளாமான மாநில விருதுகளை பெற்றவர். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னம் என பல மொழிகளிலும் நடித்து வருபவர்.
இந்நிலையில், தற்போது அவர் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். போர்ச்சிக்கீசிய மாலுமி வாஸ்கோடகாமா இந்தியா வந்த போது, இந்தியாவில் அவர் சேர்த்த சொத்துக்களை பாதுகாக்கும் காவலன் பாரோஸ் என்பவரின் கதையைத்தான் மோகன்லால் இயக்கி வருகிறார். பாரோஸ் வேடத்தில் மோகான்லால் நடித்து வருகிறார்.
இப்படத்தின் பூஜை விழா சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. கேரளாவில் உலவும் புனைவுக்கதை இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. குழந்தைகளுக்கான ஃபேண்டஸி கதை இது. அதே நேரம் அனைத்து வயதினரும் ரசிக்கும் படமாகவும் உருவாகவுள்ளது. இப்படத்திற்கு Barroz: Guardian of D’Gama’s Treasure என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
#Barroz pic.twitter.com/TErniDkoYD
— Mohanlal (@Mohanlal) March 24, 2021