web analytics
Monday, August 8SOCIAL MEDIA

அஜித் 61 படத்தில் நடிக்க மறுத்த 2 சூப்பர் ஸ்டார்கள்.. அப்போ வாய்ப்பு யாருக்கு?…

அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமூலுக்கு வந்ததால் அதன் வெளியீடு தள்ளிப்போனது. ஆனாலும், பிப்ரவரி 24ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ஆனால், இந்த செய்தியை இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் உறுதி செய்யவில்லை.

ஒருபக்கம் அஜித்தின் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இது அஜித்தின் 61வது திரைப்படமாகும். இந்த படத்திலும் வலிமை படத்தின் அதே டீம் அப்படியே இணைகிறது. அதாவது, போனிகபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் குறுகிய கால படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது.

ajith

இப்படம் பற்றி கருத்து தெரிவித்த வினோத் ‘இப்படத்தில் குறைவான சண்டை காட்சிகள், நிறைய வசனங்கள் இருக்கும். உலக அளவில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய சமூக பிரச்சனையை இப்படம் பேசும்’ என தெரிவித்துள்ளார். இப்படத்திற்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கும் பணி ஹைதராபாத்தில் இன்று துவங்கியுள்ளது. விரைவில் இப்படத்தின் முதல் கட்டப்பணிகள் துவங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தில் அஜித்துக்கு பின் ஒரு பவர்புல் வேடம் ஒன்று இருக்கிறதாம். இதில், நடிக்க மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை படக்குழு அணுகியுள்ளது. ஆனால், அவர் ஒரு படத்தை இயக்கவுள்ளதால் நோ சொல்லிவிட்டார். எனவே, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவை கேட்டனர். அவரும் கால்ஷீட் இல்லை என கை விரித்துவிட்டாராம். எனவே, வேறு யாரை நடிக்க வைக்கலாம் என வினோத் யோசித்து வருகிறாராம்.

%d bloggers like this: