web analytics
Sunday, February 5SOCIAL MEDIA

முன்பதிவிலேயே ரூ.100 கோடி -மோகன்லால் படத்திற்கு மாஸ் ஓப்பனிங்

மலையாளத்தில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். அங்கு பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். பல வருடங்களாக தனது மார்க்கெட்டை தக்க வைத்திருப்பவர். தமிழில் இருவர், ஜில்லா, உங்களில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் பல வெற்றிபப்டங்களை இயக்கிய பிரியதர்ஷன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள சரித்திர திரைப்படம் ‘மரைக்கார் அரப்பிக்கலிண்டே சிம்ஹம்’. இது ஒரு சரித்திரை திரைப்படமாகும். இப்படம் ரூ.85 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியானது. உலகமெங்கும் மொத்தம் 4100 திரையரங்குகளில் இப்படம் வெளியானது.

இப்படம் முன் பதிவிலேயே ரூ.100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றிலேயே இப்படி முன்பதிவில் இவ்வளவு தொகை வசூலானதில்லை என திரையுலகில் பேசி வௌர்கின்றனர். தமிழில் ‘அரபிக்கடல் சிங்கம்’ என்கிற பெயரில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.