சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் அதிபர் லெஜெண்ட் சரவணா துவக்கத்தில் விளம்பர படங்களில் மட்டும் நடித்து வந்தார். திடீரென அவருக்கு சினிமா ஆசை ஏற்பட தி லெஜெண்ட் என்கிற படத்தில் நடிக்க துவங்கினார்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை விளம்பர படங்களை இயக்கும் இரட்டையர்கள் ஜே.டி. ஜெர்ரி இயக்கியுள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற மொசலோ மொசலு பாடல் மேக்கிங் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.