நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது.

இப்படத்திற்கான டப்பிங் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஜெக்டே நடித்துள்ளார். இப்படம் 2022ம் வருடம் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் விஜய் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கவுள்ளது. இப்படத்தை தோழா படத்தை இயக்கிய தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கவுள்ளார்.

தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

vijay

மேலும், இப்படத்தின் கதையை கேட்ட விஜய், கடந்த 20 வருடங்களில் இப்படி ஒரு கதையை நான் கேட்டதில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறினாராம். பல வருடங்களுக்கு பின் இப்படத்தில் அழகான காதல் காட்சிகள் அமைந்துள்ளதாம். எனவே, இப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிராராம் விஜய். இப்போதைக்கு இப்படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பது மட்டுமே உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளது. எனவே, தமிழ், தெலுங்கு என 2 மொழிக்கும் ஏற்றவாறு கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.ராஷ்மிகா மந்தனா மற்றும் சில பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

பீஸ்ட் படத்தில் ஏற்கனவே விஜயுடன் பூஜா ஹெக்டே நடித்துவிட்டார். எனவே, அவர் நடிக்க வாய்ப்பில்லை. அமைரா தஸ்தூர் , ராஷ்மிகா மந்தனா ஆகியோரில் யாரேனும் ஒருவர் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளாத செய்திகள் பரவி வருகிறது.