நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 4 வருடங்கள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
ஆனால், திரைப்படங்களில் கவர்ச்சியான நடிப்பது உள்ளிட்ட சில காரணங்களினால் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இருவரும் கடந்த வருடம் பிரிந்துவிட்டனர். இது திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அதன்பின் சமந்தா சினிமாவில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், நாக சைத்தன்யா தற்போது 2வது திருமணத்திற்கு தயாராகி விட்டார் என தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. அவரை மறு திருமணம் செய்து கொள்ளும் படி அவரின் பெற்றோர்கள் வலியுறுத்தவே ‘செய்து கொள்கிறேன்.ஆனால், அந்த பெண் கண்டிப்பாக நடிகையாக இருக்கவே கூடாது’ என நிபந்தனை விதித்துள்ளாராம் நாக சைத்தன்யா. அவர் கூறியபடியே ஒரு பெண்ணை அவர்கள் தேர்ந்தெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.