தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் சமந்தா. சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த புஷ்பா படத்தில் கூட அவர் நடனமாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் செம ஹிட் ஆனது.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவும் 2017ம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்களுக்குள் சில காரணங்களால் மனக்கசப்பு ஏற்பட்டது. எனவே, சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டது. ஆனால், இருவரும் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் நாக சைத்தன்யா அளித்த பேட்டியில் ‘பிரிந்திருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காகவே நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது. இதுபோன்ற சூழலில் விவகாரத்து ஒன்றே சிறந்த முடிவு. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ என தெரிவித்துள்ளார்.