பல வருடங்களாக லிவ்விங் டூ கெதரில் இருந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடிக்கு இன்றுசென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை ரிசார்ட்டில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த திருமணத்திற்கு திரையுலகில் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனவே, நடிகர், நடிகையர்கள், தயாரிப்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர். நயன் -விக்கி திருமணத்திற்காக பெரிய அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது.. திருமணத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமண நிகழ்வை படம்பிடிக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இயக்குனர் கவுதம் மேனன் இதை இயக்கி வருகிறார்.
திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன் எடுத்து வரக்கூடாது, புகைப்படம் எடுக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. செய்தியாளர்களுக்கு அனுமதியும் வழங்கப்படவில்லை. எனவே, திருமணம் தொடர்பான புகைப்படங்கள்,வீடியோ என எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது திருமண கோலத்தில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.