கோலிவுட்டில் நடிகைகளில் உச்சத்தில் இருப்பவர் நயன்தாரா. பல வருடங்களாக இவரின் மார்க்கெட் கீழிறங்காமல் அப்படியே இருக்கிறது.

விஜய், அஜித், ரஜினி போன்ற பெரிய நடிகர்களுடன் மட்டும் ஜோடி போட்டு நடித்து வருகிறார். ஒருபக்கம், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் பல வருடங்களாக லிவ்விங் டூ கெதரில் இருக்கிறார்.

அவரின் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். அடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள நயன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்திலும் அவர் நடிக்கவுள்ளார்.

சில வருடங்களாக ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர் சில மாதங்களுக்கு முன்பு ரூ.10 கோடியாக உயர்த்தி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தற்போது ரூ.15 சம்பளம் கேட்கிறாராம். இதைக்கேட்டு தயாரிப்பாளர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.