தமிழ் சினிமாவில் நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் நயன்தாரா. ரசிகர்கள் இவரை லேடி சூப்பர்ஸ்டார் என அழைத்து வருகிறார்கள். ஒருபக்கம் விஜய், அஜித், ரஜினி போன்ற பெரிய நடிகர்களுக்கு ஜோடியாகவும், ஒரு பக்கம் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் சமந்தாவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இதுவரை 5லிருந்து 6 கோடி வரை சம்பளமாக பெற்று வந்த நயன்தாரா டிரைடண்ட் ரவீந்திரன் தயாரிக்கவுள்ள ஒரு புதிய படத்தில் ரூ.10 கோடியாக உயர்த்தி விட்டாராம். இப்படத்தை இயக்குனர் அட்லீயின் உதவியாளர் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.