கடந்த சில வருடங்களாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இப்போது வரை அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக கூறி அது தொடர்பான மோதிரத்தையும் ஒரு நேர்காணலில் நயன்தாரா காட்டினார்.
இந்நிலையில், திருமணம் செய்து கொண்டாலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளவே நயன்தாரா விரும்புவதாக செய்திகள் கசிந்துள்ளது. இந்த தகவலை பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். நயன்தாரா தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒரு படத்திற்கு ரூ.10 கோடி வரை அவர் சம்பளம் கேட்கிறார். எனவே, குழந்தை பெற்றுக்கொள்ளவெல்லாம் அவருக்கு விருப்பமில்லை எனவும், வாடகை தாய் மூலமே குழந்தையை பெற்றுக்கொள்ள அவர் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதோடு, நயனுக்கு வயதாகிவிட்டதால் அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் ரங்கநாதன் கூறியுள்ளார்.
ஏற்கனவே பாலிவுட்டில் ஷில்பா ஷெட்டி, சன்னி லியோன் உள்ளிட்ட சில நடிகைகள் மற்றும் ஷாருக்கான் உள்ளிட்ட சிலர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர். தற்போது நயனும் அந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.