சமீபகாலமாக நடிகை நயன்தாராவும், அவரின் காதலர் விக்னேஷ் சிவனும் தொடர்ந்து கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியானது.

vignesh sivan

இவர்களின் திருமணம் அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இதை விக்னேஷ் சிவனும் மறுக்கவில்லை. இந்த திருமண விழாவில் மிகவும் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளனர்.

nayan

அதன்பின் சென்னையில் ஒரு நட்சத்திற ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த நயன்தாரா – விக்னேஷ் திட்டமிட்டுள்ளனர். இதில், திரையுலகில் சேர்ந்த பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அட்லீ, ஆர்யா, விஜய் சேதுபதி, சமந்தா, அனிருத், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நயன்தாராவின் நட்பு வட்டாரங்கள் கலந்து கொள்வார்கள் என நம்பப்படுகிறது.