web analytics
Wednesday, June 29SOCIAL MEDIA

திருப்பதியில் திருமணம் இல்லை…இடத்தை மாற்றிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா

nayan

கடந்த சில வருடங்களாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். ஆனால், இப்போது வரை அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. நயன்தாராவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

nayanthara

ஒருபக்கம், நயனும், விக்கியும் தொடர்ந்து கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட இருவரும் திருப்பதி சென்று தரிசனம் செய்தனர். மேலும், இவர்களின் திருமணம் அடுத்த மாதம், அதாவது ஜூன் மாதம் 9ம் தேதி திருப்பதியில் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியானது.

nayan

ஆனால், அங்கு 150 பேர் கூட திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்பதால் ஜூன் 9ம் தேதி சென்னையிலேயே விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் நடைபெறவுள்ளது. சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் பெற்றுள்ளது. திருமணத்திற்கு பின் ஒரு நட்சத்திர ஹோட்டலில் இவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனத்தெரிகிறது.

%d bloggers like this: