nayan

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரியும். நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அதன்பின் இருவரும் காதலர்களாக வலம் வந்து வருகின்றனர்.

திருமணம் செய்து கொள்ளவில்லையே தவிர இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அதோடு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

nayan

தற்போது எது செய்தாலும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சேர்ந்தே செய்து வருகின்றனர். புதிய படங்களை தயாரிப்பது, படங்களை வாங்கி வெளியிடுவது என பிஸியாக உள்ளனர்.

இந்நிலையில், நயன்தாரா ஒரு புதிய இன்னோவா காரை வாங்கியுள்ளார். இந்த காருக்கு பூஜை போட அவரும், விக்னேஷ் சிவனும் சென்னையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவிலில் அந்த காருக்கு பூஜை போடும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

nayan