vijay

நடிகர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதில்லை. ஏனெனில், தேவையில்லாத கேள்விகளை கேட்டு மொக்கை போடுவார்கள். சில சமயம் பதில் கூற முடியாத கேள்விகளை கேட்டு தர்ம சங்கடத்திற்கும் உள்ளாக்குவார்கள்.

ஆனால், தற்போது அவர் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அவர் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் நெல்சன் இயக்கியுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது.

nelson

பொதுவாக ஒரு புதிய படத்தை விளம்பரம் செய்ய இசை வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்புகளை படக்குழு நடத்துவார்கள். ஆனால், இந்த முறை பீஸ்ட் படத்துக்கு இசை வெளியீட்டு விழா இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சன் டிவியில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினரின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 10ம் தேதி இந்த நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. எனவே, பல வருடங்கள் கழித்து விஜயை அவரின் ரசிகர்கள் டிவியில் பார்க்கவுள்ளனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருக்கப்போவதே நெல்சன்தானாம். அவர் கேட்கும் கேள்விகளுக்கு விஜய் உள்ளிட்டோர் பதில் கூறும் படி நிகழ்ச்சி கலகலப்பான உரையாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.