web analytics
Thursday, December 8SOCIAL MEDIA

ரஜினியை இயக்கப்போவது இவர்தான்!.. வெளியான வீடியோ….இது சூப்பர் காம்போ!….

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினி. சமீபகாலமாக அவரின் திரைப்படங்கள் பெரிய வெற்றியை கொடுப்பதில்லை. பாபா படத்தில் இது துவங்கியது. மேலும், அவர் நடிப்பில் வெளியான லிங்கா, குசேலன், தர்பார் ஆகிய படங்கள் வெற்றியை பெறவில்லை.

எனவே, சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார். ஆனால், அப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதில் அவர் அப்செட்டில் இருக்கும் ரஜினி அடுத்து எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அடுத்து அவரின் படங்களை இயக்கும் இயக்குனர்களின்பட்டியலில் கார்த்திக் சுப்பாராஜ், கே.எஸ்.ரவிக்குமார், நெல்சன் என பலரின் பெயர்கள் அடிபட்டது.

தற்போது இது தொடர்பான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் புதிய படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அனிருத்தே இசையமைக்கவுள்ளார்.

இது தொடர்பான ஒரு வீடியோவையும் சன் பிக்ச்ர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

%d bloggers like this: