nelson

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 13ம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தது.

நெல்சனின் ஸ்டைலே இப்படத்தில் இல்லை எனவும், காமெடி எதுவும் வொர்க் ஆக வில்லை எனவும், கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை எனவும் பொதுவான ரசிகர்கள் தெரிவித்தனர். பீஸ்ட் வேஸ்ட் என்கிற ரீதியில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். இப்படத்தை கிண்டலடித்து மீம்ஸ்களும் தாறுமாறாக வெளியானது.

beast

இதைத்தொடர்ந்து அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பே நெல்சனுக்கு இழுபறியாக இருக்கிறது என செய்திகள் வெளியானது. ஆனால், நெல்சன் தனது டிவிட்டர் பயோ பக்கத்தில் #Thalaivar169 என்கிற ஹேஷ்டேக்கை இணைத்துள்ளார். எனவே, அவர்தான் ரஜினியின் அடுத்தபட இயக்குனர் என நம்பப்படுகிறது.

anirudh

 

ஒருபக்கம், அனிருத் மூலம் ரஜினிக்கு சில விஷயங்களை தெரிவிக்க நெல்சன் முயன்றுள்ளார். அதாவது, பீஸ்ட் படம் தொடர்பான நெகட்டிவான கருத்துக்களை பரப்புவது அஜித் ரசிகர்கள்தான். பீஸ்ட் படத்தை குடும்ப குடும்பமாக வந்து பார்க்கிறார்கள். நீங்கள் எதுவும் குழப்பமடைய வேண்டாம் என அனிருத்தை வைத்து சமாதனம் செய்ய முயன்று வருகிறாராம் நெல்சன்…