web analytics
Friday, December 2SOCIAL MEDIA

அந்த நடிகையை ரெக்கமண்ட் செய்த நெல்சன்..நோ சொன்ன விஜய்…

தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். இவரை இயக்குனர் நெல்சன் தனது டாக்டர் படத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் பிரியங்கா மோகன். அவரின் நடிப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. மேலும், இப்படம் ரூ100 கோடி வசூலை பெற ஹிட் பட ஹீரோயின் ஆகிவிட்டார் பிரியங்கா மோகன்..

எனவே, விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் ஒரு வேடத்தில் அவரை நடிக்க வைக்க நினைத்தார் நெல்சன். ஆனால், வேண்டாம் என சொல்லி விட்டாராம் விஜய். இதில், அப்செட் ஆன பிரியங்காவிடம் ‘கவலைப்படாதே. அடுத்து ரஜினி படத்தை இயக்கப்போவது நான்தான். அதில், உனக்கு நல்ல வேடம் கொடுக்கிறேன்’ என உறுதியளித்துள்ளாராம் நெல்சன்…

பிரியங்கா மோகன் டாக்டர் படத்தில் நடித்து கொண்டிருந்த போதே சூர்யாவுக்கு ஜோடியாக ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: