கோலமாவு கோகிலா, டாக்டர் என 2 ஹிட் படங்களை கொடுத்தவர் நெல்சன். ஆனால், விஜயை வைத்து அவர் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. ஏறக்குறைய இப்படம் ஒரு தோல்விப்படமாகவே அமைந்தது.
அடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். இது ரஜினியின் 169வது திரைப்படமாகும். பீஸ்ட் படம் தோல்வி அடைந்துள்ள நிலையில், ரஜினி படத்தை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என நெல்சன் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்க கன்னட நடிகர் சிவராஜ்குமாரை நடிக்க வைக்க ஆசைப்படுகிறாராம் நெல்சன். தற்போது அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளாராம். கன்னடத்தில் ரஜினி படங்களுக்கு ஒரு மார்க்கெட் உண்டு. இதில், சிவராஜ்குமாரும் நடித்தால் நல்ல வசூல்பெறும் என்பதால் நெல்சன் இப்படி திட்டமிட்டுவதாக தெரிகிறது.
ஒருவேளை தலைவர் 169 ஒரு பேன் இண்டியா படமாக உருவாகிறதா என்பதும் தெரியவில்லை. விரைவில் இது தெரியவரும்.