இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2 வருடங்களுக்கு முன்பே தயாராகி விட்டது. ஆனால், சில காரணங்களால் படம் வெளியாகவில்லை.
தற்போது பஞ்சாயத்துக்கள் பேசி முடிக்கப்பட்டு ஒருவழியாக வருகிற 5ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.