பாடலாசிரியர், பாடகர், இயக்குனர் என பல முகங்களை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் இவரை சிறந்த இயக்குனர் என காட்டியது.
இவர் இரண்டாவதாக இயக்கிய திரைப்படம்தான் நெஞ்சுக்கு நீதி. இப்படம் ஆர்ட்டிக்கிள் -15 என்கிற திரைப்படத்தின் ரீமேக்காக உருவானது. கிராமபுரங்களில் சாதி கொடுமை அடிப்படையில் நடக்கும் கொலையை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருந்தது.
இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்ததால் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. படம் வெளியாகி 2 வாரங்களாகியும் பல திரையரங்குகளில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த திரைப்படம் இதுவரை தமிழகத்தில் ரூ.10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.