beast

மாஸ்டர் படத்துக்கு பின் விஜய் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியானது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு மாலை தீவிரவாதிகள் கைப்பற்றி அங்குள்ள மக்களை பணயக்கைதிகளாக வைத்துள்ளனர். அந்த மாலில் இருக்கும் விஜய் தீவிரவாதிகளை துவம்சம் செய்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை ஆகும்.

beast

பீஸ்ட் டிரெய்லர் துவங்கியதுமே தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள மாலில் முகமுடி அணிந்த ஒரு நபரை காட்டுவார்கள். அது யார் என தற்போது தெரியவந்துள்ளது. மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ-தான் அந்த முகமுடி வில்லன் என்பது தெரியவந்துள்ளது.

shine tom

தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டு அவரே இதை உறுதி செய்துள்ளார். பீஸ்ட் படம் துவங்கிய போதே இவர் சைன் டாம் சாக்கோ இப்படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

beast