விஜய் படங்கள் என்றாலே பாடல் காட்சிகள், நடனம் மற்றும் சண்டை காட்சிகளைத்தான் விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.விஜய் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் இவை தவறாமல் இடம் பெற்றிருக்கும்.
இந்நிலையில், தளபதி 67 படத்தில் முதல் முறையாக பாடல் காட்சிகள் எதுவும் இல்லாமல் விஜய் நடிக்கவுள்ளார். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தில் விஜய்க்கு ஜோடி கூட கிடையாது. விஜய் அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவுள்ளார். இப்படத்தில்தான் விஜய்க்கு நடனம்,பாடல், ஜோடி என எதுவுமே கிடையாதாம்.
எனவே, விஜயை வேற மாதிரி லோகேஷ் கனகராஜ் காட்டப்போகிறார் என நம்பலாம்..