master

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த வருடம் ஜனவரி 13ம் தேதி வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.

கடந்த வருடம் கொரோனா ஊரடங்கில் தியேட்டர்கள் மூடப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் மாஸ்டர் படத்தின் வெற்றி சினிமா உலகினரை உற்சாகப்படுத்தியது. இந்த படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் இன்று டிவிட்டரில் இதை கொண்டாடி வருகின்றனர்.

master

இந்நிலையில், இது தொடர்பாக உருவாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் மாஸ்டர் படம் துவங்கியது முதல் ஹிட் அடித்தது முதல் அப்படம் தொடர்பாக வெளியான செய்திகள் மற்றும் முக்கிய காட்சிகள் இடம் பெற்றுள்ளது.