பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கி வருகிறார். இப்படம் 2 பாகங்களாக உருவாகி வருகிறது. இதில், முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சாரா அர்ஜூன் என பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த டீசரில் பிரம்மாண்டமான காட்சிகள் இடம் பெற்றுள்ளது.