web analytics
Friday, September 23SOCIAL MEDIA

தளபதி 65 படத்துக்கு கால்ஷீட் கொடுத்த பூஜா ஹெக்டே….

pooja

மாஸ்டருக்கு பின் நெல்சம் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் அது உறுதி செய்யப்படாமல் இருந்தது. தற்போது இப்படத்திற்காக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

பூஜா ஹெக்டே மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த ‘முகமுடி’ படத்தில் தமிழில் அறிமுகமானார். ஆனால், அப்படத்தின் தோல்வியால் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, அவர் தெலுங்கு பக்கம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: