prabhas

தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி மூலம் இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் பிரபாஸ். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியது. இப்படத்தால் பிரபாஸின் மார்க்கெட் தாறுமாறாக எகிறியது.

அவரது நடிப்பில் தற்போது ராதே ஷ்யாம் என்கிற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படமும் பாகுபலி போல 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு பிரபாஸ் ரூ.100 கோடி சம்பளமாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் ரஜினி ஆகியோர் ரூ.100 கோடி சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது.