சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் வெற்றியால் பிரபாஸின் மார்க்கெட் மதிப்பு தாறுமாறாக அதிகரித்தது. ரூ.100 கோடி சம்பளம் பெறும் நடிகராக அவர் உயர்ந்தார்.
ஆனால், பாகுபலிக்கு பின் அவரால் வெற்றிப்படங்களை கொடுக்க முடியவில்லை. அவர் நடிப்பில் வெளியான சாஹோ படம் தோல்வி அடைந்தது. அதேபோல், சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் படமும் படு தோல்வி. இப்படத்தால் தயாரிப்பாளருக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என செய்திகள் வெளியானது.
இந்நிலையில், மீண்டும் ஹிட் கொடுக்க வேண்டுமெனில் அனுஷ்காவுடன் நடிக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளாராம் பிரபாஸ். தெலுங்கு பட இயக்குனர் மாருதி இயக்கவுள்ள ‘ராஜா டீலக்ஸ்’ எனும் புதிய படத்தில் இருவரும் மீண்டும் ஜோடி போடவுள்ளனர் என செய்திகள் கசிந்துள்ளது.