vadivelu

தமிழ் சினிமாவில் நடன நடிகராக அறிமுகமாகி நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்தவர் பிரபுதேவா. தமிழ் மற்றும் பாலிவுட் படங்களை இயக்கி வருகிறார். அவ்வப்போது தமிழில் நடித்தும் வருகிறார். அதோடு, நடிகர்களின் படங்களுக்கு நடனம் அமைத்து கொடுக்கும் வேலையையும் அவர் செய்து வருகிறார்.

naai sekar

இந்நிலையில், பல வருடங்களுக்கு பின் வடிவேல் கதாநாயகனாக நடித்து வரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனமைக்கவுள்ளார். வடிவேலுவுக்கு நடனமைக்க பிரபுதேவா எப்படி சம்மதித்தார் என்கிற ஆச்சர்யம் பலருக்கும் எழுந்துள்ளது.

தற்போது அதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. இந்த பாடலுக்கு நடனமைக்க பிரபுதேவாவுக்கு ரூ.1 கோடி சம்பளம் தருவதாக இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் கூற உடனே ஒப்புக்கொண்டாராம் பிரபுதேவா.

பணம் பத்தும் செய்யும்!..