சினிமாவில் பல படகளில் நடித்து, இயக்குனராகவும், எத்தாளராகவும் வலம் வந்த பிரதாப் போத்தன் (69) உடல் நல குறைவால் இன்று காலமானார்.  கேரளாவை சேர்ந்த பிரதாப் போத்தன் தமிழ், தெலுகு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்து இயக்குனராகவும், எழுத்தாளராகவும், பணியாற்றியவர். 

இவர் இயக்குனர் பாலு மகேந்திர இயக்கிய ‘அழியாத கோலகள் ‘ படம் மூலமாக தமிழில் காதநாயகனாக அறிமுகம் ஆனார். பின்பு ‘மூடுபனி ‘ ‘நெசதை கில்லாதே ‘ ‘வறுமையின் நிறம் சிவப்பு’ போன்ற பல தமிழ் படகள் நடித்து 80,90 ரசிகர்கள் மனகளை கவர்ந்தார். நாவல்கள் மீது அதிக காதல் கொண்ட இவர் பின்பு சினிமாவில் எழுத்தாளர் மற்றும் இயக்குனராக பணியாற்ற தொடகினர். 

1985-ம் மீண்டும் ‘ஒரு காதல் கதை ‘ என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். 1989- ம் ஆண்டு இவரது இயக்கத்தில் கமல், குபூ, பிரபு, அமலா இவர்களின் நடிப்பி ல் வெளியான ‘ வெற்றி விழா ‘ படம் 175 நாட்கள் திரையரகுகளில் வெற்றிகரமாக ஓடியது. அதை தொடர்ந்து ‘வா ‘ ‘மகுடம்’ ‘மை டியர் மார்த்தாண்டன்’ ‘சீவலப்பேரி பாண்டி’ ‘லக்கி மேன்’ போன்ற படகளை இயக்கினார். 

இது மட்டும் இன்றி தமிழ், தெலுகு, மலையாளம், ஹிந்தி போன்ற படகளில் முக்கிய காதபாத்திரம் நடித்து உள்ளார். தற்போது சினிமாவை விட்டு ஓய்வு எடுத்து வந்த நிலையில். இன்று உடல் நல குறைவால் காலமானார்.